அயிரவன்பட்டியில்சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

அயிரவன்பட்டியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-10-19 18:45 GMT

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயிரவன்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். யூனியன் தலைவர் எல்.ரமேஷ், பஞ்சாயத்து தலைவர் சாவித்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 2 ஆயிரத்து 460 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 12 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், 16 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, 13 கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, 2 ஆயிரத்து 115 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்பு கலவை வழங்குதல் மற்றும் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு பொருட்களும், சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்புக்கான மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் விஜயஸ்ரீ, உதவி மருத்துவர்கள் பசுவந்தனை பிரதீப் ஒசநூத்து திணேஷ், ஆய்வாளர் முருகன், பராமரிப்பு உதவியாளர்கள் ராமலட்சுமி, பார்வதி, மலைப்பட்டி பஞ்சாயத்து தலைவர் இக்பால், பஞ்சாயத்து செயலாளர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்