விஷம் குடித்து ஜோதிடர் தற்கொலை

விஷம் குடித்து ஜோதிடர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-09-22 18:45 GMT

அருப்புக்கோட்டை,

திருச்சுழி காட்டுநாயக்கர் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன்(வயது 37). ஜோதிடர். இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளியே செல்வதாக கூறி சென்ற பூமிநாதன் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ரேஷன் கடை முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்