ஜோதிடர் தற்கொலை
விருதுநகர் அருகே விஷம் அருந்தி ஜோதிடர் தற்கொலை செய்து கொண்டார்.;
விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை (வயது 49). ஜோதிடரான இவருக்கு கடந்த 15 ஆண்டுகளாக குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவரது மனைவி காளியம்மாள் (46). இவர் கடற்கரையை கண்டித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கடற்கரை குடிப்பதற்கு தனது மனைவி காளியம்மாளிடம் பணம் கேட்டபோது அவர் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது கடற்கரை வீட்டில் மயங்கி கிடந்தார். அருகில் விஷப்பொடி கிடந்தது. உடனடியாக அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி காளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.