ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது.;
சிவகங்கை வட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஞானசேகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் துரைக்கண்ணு, மாநில குழு உறுப்பினர் அருள் ஜோஷ், மாவட்ட கவுரவ தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட தலைவர் இருதய ராஜன், ராமநாதன், விஜயகுமார், கருணாமூர்த்தி, ஆரோக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 7-வது ஊதிய குழுவில் வழங்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வை ஜூலை முதல் வழங்க வேண்டும், மரணம் அடையும் ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வருமான வரி பிடித்ததை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.