வங்கி மேலாளர்களுடன் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
வங்கி மேலாளர்களுடன் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் வங்கி மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் தலைமை தாங்கினார். விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள் முன்னிலை வைத்தார்.வங்கிகளில் உள்ள ஏ.டி.எம்.மில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் வங்கிகளில் ஏ.டி.எம்.களில் செய்யப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.