மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன உதவி மேலாளர் பலி

கிணற்றில் மோட்டாரை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன உதவி மேலாளர் பலியானார்;

Update:2023-10-22 00:15 IST

உச்சிப்புளி அருகே உள்ள முருகானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மகேந்திரன். இவர் சென்னையில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார். தொடர் விடுமுறையையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகேந்திரன் உச்சிப்புளிக்கு வந்தார். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மின்மோட்டார் பழுதாக இருந்தது. இதனால் மகேந்திரன் கிணற்றில் இறங்கி பழுதான மின்மோட்டாரை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மகேந்திரன் கிணற்றுக்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்