இந்திய தேசியக் கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர், காவல் கட்டுபாட்டு அறைக்கு மாற்றம்
இந்திய தேசியக் கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;
சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது, மைதானத்திற்கு வெளியே, ரசிகர்கள் கொண்டுவந்த இந்திய தேசியக் கொடியை காவல் உதவி ஆய்வாளரான நாகராஜன், குப்பைத் தொட்டியில் போட முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்திய தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்து இருந்தது. இதனை தொடர்ந்து, தேசியக் கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.