கோவை
கோவை மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த பொறுப்பை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் கவனித்து வந்தார். இந்தநிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஆனந்த ஆரோக்கியராஜ், கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.