அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை தகவல்

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2023-07-18 13:13 GMT

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்,

அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

* அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அவருக்குச் சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* சோதனையின் போது ரூ.81.7 லட்சம், ரூ.13 லட்சம் மதிப்பு வெளிநாட்டுப் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* ரூ.41.9 கோடி நிரந்த வைப்புத்தொகை, ரூ.81.7 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* பொன்முடி மகன், உறவினர்கள், பினாமி பெயர்களில் 5 இடங்களில் சட்டவிரோதமாக மண் குவாரிகள் இருந்தன.

* இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் மூலமாகவும் முறைகேடு நடந்துள்ளது.

* இந்தோனேசிய நிறுவனத்தை ரூ.41.5 லட்சத்திற்கு வாங்கி 2022-ல் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

* ரூ.13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் இருந்தது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்