தொழிலாளி மீது தாக்குதல்

கழுகுமலையில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2023-01-09 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அன்னை தெரசா நகர் ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் அங்கையராஜ் (வயது22). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த பாரதி (35) என்பவருடைய மகன் அபிஷேக் சக நண்பர்களுடன் மது குடித்ததை செல்போனில் படம் எடுத்துள்ளார். இதை பாரதியிடம் காண்பித்துள்ளார். அவர் மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் பாரதி இது குறித்து கணவர் முத்துகிருஷ்ணனின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜா வயது (30), இசக்கிசுப்பு (28), ஆகியோரிடமும் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த 3 பேரும் நேற்று முன்தினம் அங்கையராஜிடம் கேட்டதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தாக்கியதில் அங்கையராஜ் காயமடைந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிராஜாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்