தொழிலாளி மீது தாக்குதல்

தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2023-07-10 18:45 GMT

 தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் (25) என்பவர் அந்த வழியாக சென்றார். இந்நிலையில் தெரு நாய் ஒன்று செல்வத்தை பார்த்து குரைத்தது. உடனே நாயை அவர் கல்லால் தாக்க முயன்றார். அப்போது செல்வம் வீசிய கல் மூர்த்தி வீட்டின் கதவில் பட்டது.

இதனை மூர்த்தி தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் (28) ஆகியோர் சேர்ந்து அவரை கம்பிகளால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் செல்வம், கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்