வேறொருவர் மனைவியுடன் ஓட்டம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தாரமங்கலம் அருகே வேரொருவர் மனைவியுடன் ஓட்டம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு;

Update:2023-06-15 01:38 IST

தாரமங்கலம்

தாரமங்கலம் அருகே இன்னொருவர் மனைவியுடன் ஓட்டம் பிடித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுெதாடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கல் உடைக்கும் தொழிலாளி

தாரமங்கலம் அருகே பூமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (வயது 32). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவருடைய மனைவி பவித்ராவுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே கோபி, தனது கள்ளக்காதலியையும், அவருடைய 1½ வயது பெண் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வெளியூருக்கு ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பாக மாதேஷ் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

7 பேர் மீது வழக்குப்பதிவு

போலீசார் கோபி, அவருடைய கள்ளக்காதலி, குழந்தை ஆகியோரை தேடி வந்தனர். இதற்கிடையே கோபி, அந்த பெண்ணுடன் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது போலீசார் விசாரணை நடத்திய போது, தன்னுடைய கணவருடன் செல்ல மாட்டேன் என்று பவித்ரா மறுத்து விட்டார். இதனால் அவருடைய பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பவித்ரா தன்னை விட்டு பிரிய காரணமான கோபி மீது மாதேஷ் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர்கள் கோபியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் மாதேஷ், அவரது தரப்பை சேர்ந்த நாகராஜ், மணி, வெங்கடேஷ், பெரியசாமி, விஜயா, இருசம்மாள் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்