வாலிபர் மீது தாக்குதல்

வாலிபரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2023-10-19 19:17 GMT

களக்காடு:

கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது. இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (33) மேற்பார்வையாளராக உள்ளார்.

சம்பவத்தன்று தோட்டக்குடியை சேர்ந்த சுடலைக்கண்ணு, பத்மநேரியை சேர்ந்த பிச்சையா, வானுமாமலை, இசக்கிமுத்து உள்பட 9 பேர் சேர்ந்து செந்தூரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த கணபதிராமன் தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் சுடலைக்கண்னு உள்பட 9 பேரும் சேர்ந்து, கணபதிராமனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்