தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

தூய்மை பணியாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-09-04 19:35 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை சத்யாநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சூரிய நாராயணன் மகன் அனீத்தில் (26) மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய இவரை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (54), தங்கராஜ் (33) ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேஷ், தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்