தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த கணேசன் மனைவி சுமதி (வயது 42). இவரை அதே பகுதியை சேர்ந்த செந்தில் மகன் விவேக் மற்றும் சிலர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதை தட்டிக் கேட்டபோது சுமதி மற்றும் அவருடைய மகன் யோகேஷ் ஆகியோரை சிலர் தாக்கினர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சுமதி புகார் செய்தார். அதன்பேரில் விவேக், முருகன் மனைவி ஜானகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.