வியாபாரி மீது தாக்குதல்; வாலிபர் கைது

கழுகுமலையில் வியாபாரி மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-03 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அண்ணா புதுத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 35). வியாபாரியான இவர் சேவு, மிக்சர் போன்ற தின்பண்டங்களை கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இவருக்கும், கழுகுமலை யாதவர் தெருவை சேர்ந்த சின்னதுரை என்ற மாரியப்பன் மகன் செல்வகுமார் (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மாரியப்பனிடம் செல்வகுமார் தகராறு செய்து, அவரை செங்கலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்