முதியவர் மீது தாக்குதல்

ஏர்வாடி அருகே முதியவரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-09-16 20:00 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள டோனவூர் போஸ் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகபெருமாள் (வயது 70). கடந்த ஒரு வாரத்திற்கு முன் அதே பகுதியை சேர்ந்த எபனேசர் மகன் சாமுவேல்ராஜா மது போதையில் சத்தம் போட்டு கொண்டிருந்தாராம். இதனை ஆறுமுகபெருமாள் கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகபெருமாள் தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்திருந்த போது, சாமுவேல் ராஜா, அவரை உலக்கையால் சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த ஆறுமுகபெருமாள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுவேல்ராஜாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்