டிரைவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

திசையன்விளையில் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-23 21:35 GMT

திசையன்விளை:

திசையன்விளை மணலிவிளை வடக்குத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கார் டிரைவர். இவர் ஒரு இளம்பெண்ணை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு, தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சாத்தான்குளம் காலனியை சேர்ந்த செல்வன் மகன் சுதர்சன் (27), அவரது நண்பர் குமரேசன் மகன் சரவணன் (23) ஆகியோர் திசையன்விளைக்கு வந்து அங்கு நின்று கொண்டிருந்த ரமேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து சுதர்சனை கைது செய்தார். சரவணனை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்