சமையல் தொழிலாளி மீது தாக்குதல்

போடியில் சமையல் தொழிலாளியை தாக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-03-31 18:45 GMT

போடி குலாலர்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 61). சமையல் தொழிலாளி. நேற்று இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சுமார் 25 வயது வாலிபர் ஒருவர் கந்தசாமியிடம், உனக்கு இங்கு என்ன வேலை என கேட்டு ஆபாச வார்த்தைகளால் பேசியதுடன், கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை தாக்கிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்