சிறுவன் மீது தாக்குதல்

களக்காடு அருகே சிறுவனை தாக்கிய மீன் வியாபாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2023-05-07 18:54 GMT

களக்காடு:

களக்காடு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 52). இவர் மீன்கடை வைத்துள்ளார். இவருக்கும் 10-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த சிறுவன் களக்காடு பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த பொன்ராஜ் சிறுவனை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பொன்ராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்