கவர்னரை திரும்ப பெற சொல்வது, வழக்கு தொடர்வது சரியானது அல்ல - தமிழிசை
கவர்னரை திரும்ப பெற சொல்வது, வழக்கு தொடர்வது சரியானது அல்ல என தெலுங்கானா கவர்னர் தமிழிசை கருத்து கூறியுள்ளார்.;
சென்னை,
கவர்னரை திரும்ப பெற சொல்வது, வழக்கு தொடர்வது சரியானது அல்ல என தெலுங்கானா கவர்னர் தமிழிசை கருத்து கூறியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த பிறகு பேசிய அவர், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் எனக் தெரிவித்தார்.
கவர்னர் பதவி என்பது ஒரு முதல் குடிமகன் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க தான் வேண்டும் எனவும் தமிழிசை குறிப்பிட்டார்.
"கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து தான் ஆகணும்" - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்#governor | #telangana | #tamilisaisoundararajan | #thanthitv https://t.co/FGC8HcGfjy
— Thanthi TV (@ThanthiTV) December 6, 2022