அசன விருந்து
தூத்துக்குடி சிலுவைப்பட்டி புனிதமிக்கேல் அதி தூதர் கெபியில் அசன விருந்து நடைபெற்றது.;
தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியில் புனிதமிக்கேல் அதி தூதர் கெபி அமைந்துள்ளது. இந்த ஆலய முதலாம் ஆண்டு திருப்பலி நடந்தது. திருப்பலியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். திருப்பலியை தொடர்ந்து அசன விருந்து நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அசன விருந்து ஏற்பாடுகளை தூத்துக்குடி வேதாந்தா-ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சார்பில் ஸ்டெர்லைட் ஊழியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.