ஆனைமலையில் நூதன மோசடியில் ஈடுபட்ட ஆசாமி சிக்கினார்-ரூ.50 ஆயிரம், கார் பறிமுதல்

ஆனைமலையில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-12-30 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலையில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நூதன ேமாசடி

கோவை மாவட்டம் காந்திபுரம் ராம் நகரை சேர்ந்தவர் பிரவின்குமார் (வயது 34). வங்கி கடன் உதவி பெற்று தரும் பங்குதாரர். இவரிடம் திருவேங்கடசாமி என்பவர் தனக்குத் தெரிந்த கேரளாவை சேர்ந்த 2 நபர்கள், கருப்பு பணம் வைத்துள்ளனர். அதனை மாற்றுவதற்காக ஒரு லட்சம் கொடுத்தால், இரண்டு லட்சம் ரூபாய் தருவார்கள் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி பிரவின்குமார் திருவேங்கடசாமியுடன் ஆனைமலை அம்பராம் பாளையம் பகுதியில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவரிடம் பிரவின் குமார், ரூ. 1 லட்சத்தை கொடுத்துவிட்டு அவரிடம் கருப்பை பையில் இருந்து ரூ.2 லட்ச்சத்தை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அந்த நபர் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார். தொடர்ந்து பிரவீன்குமார் கருப்பு பையை பிரித்து பார்த்த போது அதில் இருந்த வெள்ளை கலரில் நான்கு பணகட்டுகளில், மேற்புற பகுதியிலும் கீழ்புறப் பகுதியிலும் மட்டும் தலா 500 ரூபாய் நோட்டு உள்புறம் வெள்ளை நிறத்தாள் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் தான் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.

ஆசாமி சிக்கினார்

இதுபிரவின்குமார் ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். நேற்று மாலை போலீசார் மீனாட்சிபுரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பாலக்காடு மைத்ரேயி நகர் பகுதியைச் சேர்ந்த தாகிர் (38) என்பதும், பிரவீன்குமாரிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த கார் மற்றும் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்