நில அளவையர் பணிக்கான தேர்வை 2,547 பேர் எழுதுகிறார்கள்

வேலூர் மாவட்டத்தில் வருகிற 6-ந் தேதி நில அளவையர் பணிக்கான தேர்வை 2,547 பேர் எழுதுகிறார்கள்.;

Update: 2022-11-03 13:16 GMT


தமிழகம் முழுவதும் நில அளவையர் பணிக்கான எழுத்துத்தேர்வு வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது.

வேலூர் உள்பட 15 மாவட்டங்கள் தேர்வு மையங்களாக செயல்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.

இந்த தேர்வை எழுத ஏராளமான நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் நில அளவையர் பணிக்கான தேர்வு கொணவட்டம் அரசுப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளி, சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, சாந்திநிகேதன் பள்ளி, சினேகதீபம் பள்ளி, செவன்த்டே பள்ளி, தேசியா மெட்ரிக்பள்ளி என்று 9 இடங்களில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வு கூடங்களில் 2,547 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்