ஆருத்ரா மோசடி விவகாரம்: சம்மனை ரத்து செய்ய கோரி நடிகர் ஆர்.கே.சுரேஷ் மனு

ஆருத்ரா மோசடி விவகாரம்: சம்மனை ரத்து செய்ய கோரி நடிகர் ஆர்.கே.சுரேஷ் மனு -ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு.;

Update: 2023-06-07 18:39 GMT

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.2 ஆயிரத்து 438 கோடி பெற்று மோசடி செய்ததாக போலீசில் புகார்கள் செய்யப்பட்டன.

இந்த புகார்களின் அடிப்படையில், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 21 பேரின் மீது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான ஒரு இயக்குனர் ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பா.ஜ.க., ஓ.பி.சி., பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு, மோசடி பணத்தில் ஒரு தொகை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, ஆர்.கே.சுரேசை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.கே.சுரேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்