அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் 6 பேர் கைது

பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர்.

Update: 2024-09-03 15:10 GMT

அருப்புக்கோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார்(33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில் காளிக்குமார் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனத்தை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த காளிக்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காளிக்குமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி பேச்சுவார்த்தை நடத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் பெண் டி.எஸ்.பி. காயத்ரி மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த போலீசார் டி.எஸ்.பி. காயத்ரியை அவர்களிடமிருந்து மீட்டனர்.

அங்கு பதற்றமாக சூழல் ஏற்பட்ட தொடர்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் ஆய்வு செய்தார். பெண் டி.எஸ்.பி.யை தாக்கியதாக 4 பேரை பிடித்து போலீசார் விசாராணை நடத்தி வந்தனர். மேலும் மோதலில் ஈடுபட்டதாக மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருந்தனர்.

இந்த சூழலில் தாக்குதல் தொடர்பாக, பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்