அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நகர்ப்புற மருத்துவ மையம்அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருவண்ணாமலையில் அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நகர்ப்புற மருத்துவமையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நகர்ப்புற மருத்துவமையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
அருணை மருத்துவக் கல்லூரி
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பில் நகர்புற மக்கள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நகர்புற மருத்துவ மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மருத்துவக்கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், இயக்குனர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி மருத்துவமையத்தை பார்வையிட்டார்.
பல்நோக்கு மருத்துவ வசதி
இதில் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வசதி, மகபேறு மருத்துவ சிகிச்சை, பல்நோக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
விழாவில் தி.மு.க.வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை.வெங்கட், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், சுகஸ்தலா மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், சிவஸ்ரீ ஸ்கேன்ஸ் நிறுவனருமான டாக்டர் பிரவீன்ஸ்ரீதரன், மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட அரசு வழக்கறிஞர் மனோகரன், வக்கில் வெற்றி டிஜிட்டல் கார்த்திக், அருணை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குணசிங், மருத்துவக்கண்காணிப்பாளர் டாக்டர் குப்புராஜ், நிர்வாக அலுவலர் சேஷாத்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.