ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.;

Update: 2022-09-30 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் அ.கல்யாண சுந்தரம், மற்றும் பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவரும், ஆதவா தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான ஜெ.பால குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்