திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு சமேத வடாரண்யேஸ்வரர் கோவில். இந்த கோவில் சிவபெருமான் திருநடனம் புரிந்த 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையை உடையதும். திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்த கோவிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சாமிக்கு ஆருத்ரா விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு நேற்று இரவு 9 மணிக்கு கோவில் தலவிருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் ஆருத்ரா மகா அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நடராஜருக்கு கதம்பத் தூள், வில்வப் பொடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், புஷ்பாஞ்சலி என மொத்தம் 33 வகையான அபிஷேகங்கள் அதிகாலை 3 மணி வரை நடத்தப்பட்டது. ஆருத்ரா தரிசனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.