கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்

வேப்பம்பட்டில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-16 16:54 GMT

கணியம்பாடி ஒன்றியத்தில் வேப்பம்பட்டு, கனிகனியான், பாலாத்துவண்ணான், சலமநத்தம், சாத்துமதுரை, துத்திப்பட்டு ஆகிய 6 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் பயன்பெற முன்பதிவு செய்யப்பட்டது.

வேப்பம்பட்டு கிராமத்தில் நடந்த முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கணியம்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் சவுபாக்கியலட்சுமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.. இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்