மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள்
நாமக்கல்லில் மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள் நேற்று முன்தினம் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லில் நேற்று முன்தினம் கவின் கலை (ஓவியம், களிமண் சிற்பங்கள், காகித கூழ் பொருட்கள், செதுக்கு சிற்பம்), நாடகம், கருவி இசை, நடனம், மொழித்திறன் - பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டிகள் நடந்தது. நேற்று கருவி இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தெருக்கூத்து, விவாத மேடை நடந்தது. அதில் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.
இன்று (வெள்ளிக்கிழமை) வாய்ப்பாட்டு, இசை சங்கமம், நடனம், நாடகம் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.