கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி

Update: 2023-08-04 18:45 GMT

கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நன்னிலம் பேரூராட்சி தலைவர் ராஜசேகரன் முன்னிலையில் கலைஞரின் உரிமை தொகையை பெறுவதற்காக விண்ணப்ப படிவம் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டது. இதில் நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, கிராம நிர்வாக அலுவலர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்