கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்
கலைஞா் மகளிா் உரிமைத்திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் இன்று(சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடா்பாக தமிழக முதல்வா் அறிவிப்பின்படி சிறப்பு முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த முகாம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி தஞ்சை வண்டிக்காரத்தெரு அரசினர் பள்ளியில் சிறப்பு முகாமில் ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அலுவலர்களிடம் கொடுத்தனர். இந்த முகாம்களில் விடுபட்ட விண்ணப்பதாரா்கள் மற்றும் வருவாய்த்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத்திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத்திட்டம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் ஆவர்.