கோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2024-04-23 08:16 GMT

சென்னை,

சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் கோயம்பேடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 5 மணி அளவில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 டன் மாம்பழம் மற்றும் 3 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்