அரசு பள்ளியில் கலைத்திருவிழா
மருதம்புத்தூர் அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
ஆலங்குளம்:
மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலைத்திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். மருதம்புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம் நடந்தது. மாணவியர் கிராமப்புற பாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.