பழனி அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

பழனி அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.;

Update: 2022-11-14 16:53 GMT

பழனி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதற்கு அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். உதவியாளர் திவ்யா முன்னிலை வகித்தார். பழனி கல்வி மாவட்ட அலுவலர் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்