பெட்டிக்கடை-வீட்டுக்கு தீவைப்பு; நகை,பணம் எரிந்து சேதம்

கோட்டூர் அருகே முன்விரோதம் காரணமாக பெட்டிக்கடை-வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டது. இதில் நகை, பணம் எரிந்து சேதம் அடைந்தது. இதுதொடர்பாக தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-22 18:45 GMT

கோட்டூர்:

கோட்டூர் அருகே முன்விரோதம் காரணமாக பெட்டிக்கடை-வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டது. இதில் நகை, பணம் எரிந்து சேதம் அடைந்தது. இதுதொடர்பாக தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் ஊற்றி தீவைப்பு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மழவராயநல்லூர் ஊராட்சி தட்டாங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ்(வயது 60). இவருடைய மனைவி நட்சத்திரமேரி. லாரன்ஸ் தனது கூரை வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்

நேற்று அதிகாலை முன்விரோதம் காரணமாக காசாங்குளம் கிராமத்தை சேர்ந்த நேருதாசன்(37) என்பவர், லாரன்சின் பெட்டிக்கடை மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார்.

தொழிலாளி கைது

இதில் பெட்டிக்கடையும், அதன் அருகில் உள்ள கூரை வீடும் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீவிபத்தில் பெட்டிக்கடையில் இருந்த பொருட்களும், வீட்டில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லாரன்ஸ் மனைவி நட்சத்திரமேரி, கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேருதாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்