தேசிய பேரிடர் மீட்பு படை வருகை
அரக்கோணத்தில் இருந்து ஊட்டிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்தனர்.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 20 பேர் வருகை தந்து உள்ளனர். இவர்கள் நேற்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரும்(பொது), ஒருங்கிணைப்பு அதிகாரியுமான தனப்பிரியாவை சந்தித்தனர். அவர்கள் மாவட்ட நிர்வாகம் குறித்து அறிந்து கொள்வதற்காக இங்கு வந்து உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி வரை தங்கி இருப்பார்கள். அவர்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் மருத்துவமனை, கல்லூரி, முதியோர் தங்கும் விடுதிகள், முகாம்களில் சமூக விழிப்புணர்வு, பள்ளி பாதுகாப்பு, மரம் நடுதல் மற்றும் பேரிடர் பகுதிகளை பார்வையிடுதல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.