கஞ்சா சாக்லெட்டுகள் விற்றவர் கைது

Update:2023-05-02 00:30 IST

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பட்டு அன்புக்கரசன் மற்றும் போலீசார் காமராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர். அங்கு கஞ்சா கலக்கப்பட்ட சாக்லெட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா சாக்ெலட் விற்றதாக ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரை சேர்ந்த ஜாஜாடி கிஷோர் பேகேரா (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும். அவரிடம் இருந்து ரூ.1,400 மதிப்புள்ள 700 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

Tags:    

மேலும் செய்திகள்