கைதான வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு
இரட்டை கொலை வழக்கில் கைதான வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
விருதுநகர் அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் சந்தனகுமார், மணிகண்டன் ஆகிய இருவரையும் கொலை செய்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பவரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரால் பொது அமைதிக்கு தொடர்ந்து பங்கம் ஏற்படும் என்ற நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மணிகண்டனை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட கோரி கலெக்டர் மேகநாத ரெட்டிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார், மணிகண்டனை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.