மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது

மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-27 18:45 GMT

பள்ளிபாளையம்

காடச்சநல்லூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 60 வயதுடைய மூதாட்டியும், ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியும் கொலையான வழக்கில் காடச்சநல்லூரை சேர்ந்த செல்வம் (வயது 32) என்பவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர் பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்துகொள்வதால் செல்வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து செல்வத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சேலம் சிறையில் உள்ள செல்வத்திடம் அதிகாரிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்