சாராயம் விற்ற வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது
சாராயம் விற்ற வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சாராயம் விற்ற வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாயக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராம்கி (வயது 28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ராம்கி மீது சாராயம் விற்றது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்த ஆணை நகலை போலீசார் அவரிடம் வழங்கினர்.