தொழிலாளி வீட்டில் திருடியவர் கைது

பண்ருட்டி அருகே தொழிலாளி வீட்டில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-09 18:45 GMT

பண்ருட்டி

பண்ருட்டி அருகே முத்துநாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது 32). சம்பவத்தன்று இவர்களது வீட்டின் கூரையை பிரித்து மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்தார். பின்னர் அவர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸபெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இதில் நகையை திருடியது அதே பகுதியை சேர்ந்த முத்தாலு (35) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்