மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்தியவர் கைது

விக்கிரவாண்டி அருகே மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்தியவரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் அவர் சிக்கியது தொியவந்தது

Update: 2023-06-25 18:45 GMT

விக்கிரவாண்டி

தீப்பிடித்து எரிந்தது

விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலியபெருமாள்(65). இவரது மனைவி அம்பிகா. சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது இரவு 11:30 மணி அளவில் திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த கலியபெருமாள், அம்பிகா இருவரும் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, நகைகள், துணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

கண்காணிப்பு கேமரா

பின்னர் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது முன்விரோதம் காரணமாக கலியபெருமாளின் மருமகன் அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவர் வீ்டடுக்கு தீ வைத்து வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

இது குறித்து கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசன் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்