கஞ்சா வைத்திருந்தவா் கைது

கஞ்சா வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-25 19:44 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் தெற்கு அகஸ்தியர்புரம் பஸ்நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விக்கிரமசிங்கபுரம் ஜார்ஜ்புரம் தெற்கு தெருவை சேர்ந்த சுதாகர் (வயது 45) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்