வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

நெல்லை டவுனில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-18 22:19 GMT

நெல்லை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 23) என்பவர் தனது வீட்டில் 10 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்