மது வாங்கித்தர கேட்டு தொழிலாளியை தாக்கியவர் கைது
குருவிகுளத்தில் மது வாங்கித்தர கேட்டு தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;
திருவேங்கடம்:
திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மகன் முகேஷ் (வயது 24). கூலி தொழிலாளி. இதே ஊரை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் ரகுவரன் (28). சம்பவத்தன்று முகேஷ் தெருவில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த ரகுவரன், முகேஷிடம் மது வாங்கி தருமாறு கூறினாராம். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ரகுவரன், முகேசை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த முகேஷ் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுவரனை கைது செய்தனர்.