பேக்கரியில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தர மறுத்து ஊழியரை தாக்கியவர் கைது

பணம் தர மறுத்து ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-24 18:48 GMT

திண்டுக்கல் மாவட்டம், மங்களபட்டியை சேர்ந்தவர் ராமன் மகன் ரவிச்சந்திரன். இவர் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு வந்த அரியலூர் மாவட்டம் வாழைக்குளி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜயகுமார்(வயது 26) என்பவர் மிக்சர், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் என ரூ.360-க்கு பொருட்களை வாங்கிவிட்டு பணத்தை தர மறுத்துள்ளார். வெளியூரிலிருந்து இங்கு வந்து கடை வைத்துவிட்டு உள்ளூர்காரனிடம் பணம் கேட்கிறாயா? என கூறி அவரை விஜயகுமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்