ஆத்தூர் அருகே ஆயுதப்படை போலீஸ்காரர் அதிரடி கைது

ஆத்தூர் அருகே வீடு புகுந்து தாய்-மகளை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-09-06 11:13 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே வீடு புகுந்து தாய்-மகளை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஆயுதப்படை போலீஸ்காரர்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆவரையூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் மாகாளி (வயது 27). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், முக்காணியை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி ஷோபனா (29) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் ெதாடர்பாக பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் மாகாளியிடம் வாங்கிய பணத்தை கடந்த 4-ந் தேதி தருவதாக ஷோபனா உறுதி அளித்திருந்தாா். ஆனால், குறித்த தேதியில் அவரால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

தாய்-மகள் மீது தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த மாகாளி, சோபனாவின் வீட்டுக்குள் அத்திமீறி நுழைந்தார். அங்கிருந்த டி.வி., பிரிட்ஜ், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும், ஷோபனா, அவரது மகளை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஷோபனா ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதிரடி கைது

இதுகுறித்து அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினார். வீடு புகுந்து தாய், மகளை தாக்கிய போலீஸ்காரர் மாகாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பனுக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாகாளியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

-----------

Tags:    

மேலும் செய்திகள்