புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக, வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். அதில் 2 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தும்மலகுண்டுவை சேர்ந்த கார்த்திக் (வயது 25), திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (51) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.600 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.